Saturday 6 October 2012

STRESS மன அழுத்தம் குறைய/குறைக்க



மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?





இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லாத் துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்த மானசூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல் லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதியாக அழுத்தமானசூழலுக்கு உள்ளாகும் பொதுமக்கள். என எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே

Thursday 4 October 2012

அன்னிய முதலீடு


ஓய்வூதியம் வயது முதிர்ந்த காலத்தில் வாழ்வின் ஆதாரமாகும். இதிலும் அன்னிய முதலீடு அனுமதி ஓய்வூதிய ஆதாரத்தையே சீர்குலைக்கும். 
சில்லரை வர்த்தகத்தில் அந்நியரை அனுமதித்த மன் மோகன் சிங் அரசு தற்போது காப்பீட்டுத்துறை, பென்சன் துறைகளையும் அந்நியருக்குத் தாரை வார்க்க முடிவு செய்துள்ளது. காப்பீட்டுத்துறையில் 49 சதவீதம் அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்றும் பென்சன் துறையில் 29 சதவீதம் அளவிற்குஅந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்றும் வியாழனன்று புதுதில்லியில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதியாக கம்பெனிகள் சட்டத்தைத் திருத்தவும் மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி நாடாளுமன்ற நிலைக்குழுவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும் பென்சன் நிதியை அந்நியர்கள் சூறையாட அனுமதிக்கும் வகையில் அந்தத்துறையில் 26 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.மக்களின் வாழ்வாதரங்களை சீர்குலைக்கும் முடிவை மைய அரசு கைவிடவிடுவது மிகவும் அவசியமாகும்.

ஓட்டுநர் நடத்துனர்கள் பற்றாகுறை


·         ஓட்டுநர், நடத்துநர் பணிக்காக ஆள் எடுப்பதற்காக வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் 4 ஆயிரம் பேர் வரை அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்
1000 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ளனர். இவர்களில் தேர்வு 
செய்யப்பட்டவர்கள் சிலரும், பணியில் சேர விருப்பமில்லை என்று 
தெரிவித்து விட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
ஆள் பற்றாக்குறை காரணமாக மாநகரப் போக்குவரத்து கழக (எம்.டி.சி.) பணிமனைகளில் தினமும் 400 பஸ்கள் வரை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அத்துடன் டீசல் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதால் கடும் வருவாய் இழப்பை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சந்தித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 3,497 பஸ்கள் உள்ளன. இவற்றில் 275 பஸ்கள் உபரி பஸ்கள். மீதமுள்ள 3,222 பஸ்கள் 748 வழித் தடங்களில் தினமும் இயக்கப்பட வேண்டும்.
ஆனால், இப்போது ஆள் பற்றாக்குறை காரணமாக மொத்தமுள்ள 25 பணிமனைகளில் தினமும் 200 முதல் 400 பஸ்கள் வரை இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால்,

Wednesday 3 October 2012

காமராசர்

காமராசர் பற்றிய வீடியோ யூ டியூபில் பார்த்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
காமராசர் இறந்தபோது அவரிடம் இருந்த மொத்த பணம் வெறும் 67 ரூபாய் மட்டுமே.இன்று...................................................