Sunday 20 January 2013

அரசுப்போக்குவரத்து


* வஞ்சிக்கப்படும் ‘ரிசர்வ்’ தொழிலாளர்கள் * தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம் * சீரழிக்கப்படும் அரசுப்போக்குவரத்து
கோரிக்கைகள் தீரும்வரை உண்ணாவிரதம்

ஜன.23 அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம் துவங்குகிறது
சென்னை, ஜன. 20-அரசுப் போக்குவரத்துத் தொழி லாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் வரை, ஜனவரி 23ம்தேதிமுதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெறும் என தமிழ்நாடு அரசுப் போக் குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சம்மேளனத் தின் பொதுச் செயலாளர் ஏ.பி.அன் பழகன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:16.5.2011 அன்று அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டு கழித்து புதிய பேருந்துகள் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கியது. 9.5.2012 அன்று தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதல்வரால் போக்குவரத்துக் கழகங்கள் சம்பந்தமாக சில அறிவிப்புகள்

டீசல் விலை உயர்வு


தனியாருக்கு 55 பைசா அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 11.91 பைசாவா?

மைய அரசு டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.டீசல் விலை உயர்வு கடுமையான விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுப்பதாகும்.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 11.91 பைசா டீசல் விலை உயர்த்தி இருப்பது அரசு போக்குவரத்து கழகங்களை திட்டமிட்டு சீரழிக்கும் செயலாகும். பேருந்து கட்டண உயர்விர்க்கு பிறகும் போதிய வருவாய் இல்லாமல் கழகங்கள் பற்றாகுறையில் தள்ளாடி வருகின்றன.பழைய பேருந்துகளை மாற்றி பதிய பேருந்துகளை வாங்க இயலாமலும்,பேருந்துகளுக்கு அவசியம் தேவைகளான டயர், டியூப், பல்புகள் போன்ற உதிரிபாகங்களைகூட வாங்க முடியாமல் தள்ளாடி வரும் நிலையில் டீசல் விலை உயர்வு கழகங்களின் குரல்வளையை நெரிப்பதாகும்.
நான்கு வருட காலமாக தொழிலாளிகளுக்கு கொடுக்க வேண்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளத்தை கொடுக்காமல் {விடுப்பை தொழிலாளியின் கணக்கிலிருந்து கழித்துக்கொண்ட பிறகும்} கழகங்கள் தொழிலாளிகளை வஞ்சிக்கின்றன.


சென்ற ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து உயர்ந்த பஞ்சப்படி நிலுவைத்தொகையை ஜுலை,ஆகஸ்ட்டு ஆகிய இரண்டு மாதங்களுக்கு இன்று வரை கொடுக்கவில்லை.

ஆக மைய அரசின் இந்த வஞ்சனையான டீசல் விலை உயர்வு தனியார் முதலாளிகள் கொள்ளை லாபம் பெறவும் போக்குவரத்துகழகங்கள் நசிந்து போகவும் வழிவகுக்கும்.